டிசம்பர் 11, ம.இ.கா மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான மறுதேர்தல் கட்சித் தலைவருடனான கூட்டத்திற்குப் பின் அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், வெளிநாட்டில் மாநாடு ஒன்றில் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நாடு திரும்புவதற்காக மறுதேர்தலுக்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா, கடந்தாண்டு மலாக்காவில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறி மறுதேர்தல் நடத்துமாறு கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.