டிசம்பர் 8, இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல் எடை இருந்ததால் அவரால் நடக்க முடிய வில்லை. எனவே படுத்த படுக்கையாக இருந்த அவர் மிகவும் அவதிப்பட்டார்.
எனவே அவரது உடல் எடையை குறைக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிசிக்சை (ஆபரேசன்) செய்து முக்கால் பகுதி அகற்றப்பட்டது.
அதை தொடர்ந்து நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உயிருடன் இருந்திருந்தால் மேலும் எடை குறைந்து இருக்கும். அதன் பின்னர் அவர் சாதாரண மனிதர்களை போன்று நடமாடியிருக்க முடியும்.
துரதிருஷ்டவசமாக அவர் நிமோனியாவால் பாதித்து உயிரிழந்து விட்டார் என அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கேசவா மணர் தெரிவித்துள்ளார்.