கிசு கிசு பாவனா

கிசு கிசு பாவனா

bhavana-imman

டிசம்பர் 6, சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் படங்களில் நடித்த பாவனா கோலிவுட்டை காலி செய்துவிட்டு மல்லுவுட்டுக்கு போய் 3 வருடம் ஆகப்போகிறது. சீக்கிரமே கெட்டி மேளம் கொட்டப்போகிறது.. நடிகரை மணக்கப்போகிறார் என்று 2 மாதத்துக்கு ஒருமுறை கிசுகிசுவில் சிக்கிக்கொள்கிறார். டிஷ்யூ பேப்பரில் கையை துடைத்துவிட்டுபோவதுபோல் அதையெல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு படங்களில் ஒப்பந்தம் ஆகிக்கொண்டிருக்கிறார் பாவனா. கைவசம் 3 மலையாள படமும், கன்னடத்தில் ஒரு படமும் நடிக்க உள்ள பாவனா, தற்போது பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கும் மலையாள பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். திருமண கிசுகிசுவால் அடிக்கடி பப்ளிசிட்டி கிடைப்பதால் அவரே இந்த கிசுகிசுவை கொளுத்திபோடுகிறார் என்கிறார்கள்.