டிசம்பர் 4, கோத்தாகினபாலு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் ‘பின்பக்கமாக’ குடியுரிமை பெற்றவர்களிடமிருந்து அந்த ஆவணங்கள் பறிக்கப்படுவதோடு அவ்வாறு மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அட்டர்னி ஜெனரல் டான் ஶ்ரீ அப்துல் கானி பட்டாயில் தெரிவித்துள்ளார்.
மோசடி கும்பலிடம் போலி ஆவணங்களைக் கொடுத்து, பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள ஆவணங்களை பெற்ற கள்ளக் குடியேறிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் சட்ட பாரங்களைக் கொண்டு கிராமத் தலைவரின் கையெழுத்துடன் அடையாள ஆவணங்களைப் பெற முயற்சித்துள்ளனர் என அப்துல் கானி தெரிவித்தார்.
இவர்களை அடையாளம் காணும் பொறுப்பு அந்நிய நாட்டவர்கள் விவகாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள துணையமைச்சர் டான் ஶ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கானிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் பேசிய டான் ஶ்ரீ அப்துல் கானி பட்டாயில், ‘கள்ளக்குடியேறிகளோ அல்லது போலி ஆவணங்களைக் கொண்டு குடியுரிமை பெற்றவர்கள் 30 ஆண்டுகளான பின்னரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம் என தெரிவித்தார்.