டிசம்பர் 4, கடந்த 1992-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ ஶ்ரீ’ பட்டம் பறிக்கப்படுகிறது.
அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்த மந்திரி புசார் பதவி மீதான அரசியல் நெருக்கடியின் போது, சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் நேர்மையையும், அரசின் மாண்பு குறித்தும் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பியதால் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி முதல் அவரிடமிருந்து பறிக்கப்படுவதாக சிலாங்கூர் அரண்மனை தெரிவித்துள்ளது.
‘சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியைத் தீர்க்கும் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானையும் அவரது அரசவை மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இஸ்லாம் குறித்தும் தொடர்ந்து கேள்வியெழுப்பியதால் இம்முடிவு எடுக்கப்பட்டது” என சுல்தான் ஷாராஃபுடினின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ முகமது முனிர் பானி தெரிவித்தார்.
மேலும் பி.கே.ஆர் ஆலோசகருமான அன்வார் இப்ராஹிமின் செயல் அவர் “டத்தோ ஶ்ரீ” பட்டத்தை ஏற்கும் தகுதியை அவர் இழந்துவிட்டதையே குறிக்கிறது என்றும் டத்தோ முகமது முனிர் பானி மேலும் தெரிவித்தார்.
Next Post: லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்