டிசம்பர் 4, கடந்த சில தினங்களுக்கு முன் அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவு அம்னோ தலைவர் டத்தோ முகமது சைடி முகமது சாயிட் இந்தியர்களை “கெலிங்” என வர்ணித்தது மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த ம.இ.கா துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் கல்வியால் மட்டுமே இதுபோன்ற இனவாத அரசியலைக் களைய முடியும் என கூறியுள்ளார்.
“சில அரசியல்வாதிகள் மக்களிடையே பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே எந்த விளைவையும் பற்றி சிந்திக்காமல் இனத்துவேஷ கருத்துகளை வெளியிட்டு விடுகின்றனர்” என டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
Previous Post: முருகதாஸ் இயக்கத்தில் ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்கள்!
Next Post: ’டத்தோ ஶ்ரீ’ பட்டத்தை இழந்த அன்வார்