டிசம்பர் 2, மலேசிய இந்திய மாணவர்கள் உயர்கல்விபெற உதவும் வகையில் ’இண்டஸ்’ கல்வி அறக்கட்டளைக்கு 50லட்சம் வெள்ளி மானியம் அளிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார்.
இப்பணம் இவ்வாண்டு வழங்கப்படும் என்றார் அவர். நேற்று செந்தூலில் அந்த அறக்கட்டளையை தொடக்கி வைத்த நஜிப் இந்த அறக்க்ட்ட்லைக்கு அதன் தலைவர் டான் ஸ்ரீ ஜி.ஞானலிங்கம், அடித்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடியை 50லட்சம் வெள்ளி நிதியை திரட்டுவார் என்றார்.
காலப்போக்கில் அரசாங்கம் கூடுதல் நிதி வழங்கும் என்றும் பிரதமர் கூறினார். இந்த அறக்கட்டலை இந்திய சமூகத்தை சேர்ந்த பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.