MH17 விமான விபத்தில் பலியான மூத்த பணிப்பெண் அஸ்ரினாவுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது

MH17 விமான விபத்தில் பலியான மூத்த பணிப்பெண் அஸ்ரினாவுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது

Graduation-Cropped-340x220

நவம்பர் 27, MH17 விமான விபத்தில் பலியான மலேசிய ஏர்லைன்ஸ் விமான மூத்த பணிப்பெண் அஸ்ரினாவுக்கு நேற்று இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆம்ஸ்டர்டமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட MH17 விமானம் உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 298 பேரும் பலியாகினர்.
இதில் பயணம் செய்த அஸ்ரினா யாகோப் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தன் இளங்கலைப் படிப்பினைப் படித்து வந்தார். அந்தவகையில் நேற்று நடைப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. இவரின் பிரதிநிதியாக இவரது தாயார் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

திருமணமாகி இரு பிள்ளைகளுக்குத் தாயான 40 வயது மதிக்கத்தக்க அஸ்ரினா யாகோப் கல்வியின் மீது உள்ள ஆர்வத்தால் தன் படிப்பினை மேற்கொண்டு வந்தார். ஆனால் பட்டம் பெறும் முன்னரே இவர் இவ்விமான விபத்தில் உயிர் இழந்தார்
இவரது தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இப்பல்கலைக்கழகம் இவரது குடும்பத்திற்கு மரியாதைச் செய்தது.

இவர் கடந்த 1992ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.