என் தமிழ்

இந்தியாவுக்கு 2 பதக்கம்.

sliver

தென் கொரியாவின் ஜெஜு நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் சர்ஜுபாலா, சவீதி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதிச் சுற்றில் சர்ஜுபாலா, தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் நஸிம் கிஸாய்பேயிடம் தோல்வியடைந்தார். இதனால் சர்ஜுபாலா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. 81 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதிச் சுற்றில் சவீதி, சீனாவின் யங் ஜியோலியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும், சவீதிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Scroll to Top