நவம்பர் 23, சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 54 பேர் காயமடைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.9 ஆக பதிவானது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நகரமான காங்டிங்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த நிலையில், சீன புவியியல் ஆராய்ச்சி மையம் 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தில் 70 வயது பெண்மணி ஜன்னல் இடிந்து மேலே விழுந்ததில் பலியானார். மற்றொருவர் எப்படி பலியானார் என்ற விவரம் தெரியவில்லை. அப்பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும், மேலும் பல வீடுகள் மற்றும் ஏராளமான கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் அந்நகரத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையமும் சேதமடைந்துள்ளது.