நவம்பர் 23, சபாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ‘சபா ஒ.கெ. பா’ மற்றும் ‘விசிட் சபா’ என்ற சுலோகன்களைக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களுக்கு சபாவின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர் இங்குள்ள அரசு சாரா அமைப்புகள்.
சபாவில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதினால் சுற்றிப்பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அங்கே சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அரசு சாரா அமைப்புகள் இம்மாதிரியான முகாம்களை நடத்தி வருகின்றன.
மலேசியாவில் உள்ள சபாவின் சுற்றுலாவைக் குறித்து மலேசிய மக்களான நாம் ஆதரவு தெரிவிப்பது அவசியமானது எனசும் அதனை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகத்தான் இவ்வகையான முகாம்கள் நடந்து வருகின்றன என இந்த அமைப்புகளின் தலைவர் ஜஸ்டின் சுனாம் ஓங் தெரிவித்தார்.
Previous Post: திரங்கானுவில் வெள்ளம்: நிலைமை சீரடைந்து வருகிறது