என் தமிழ்

சிவநேசனுக்கு சுப்பிரமணியம் எச்சரிக்கை

vik

நவம்பர் 21, விவேகானந்த ஆசிரம விவகாரத்தில் ம.இ.காவின் உயர்மட்ட தலைவர்கள் மெளனம் காக்கின்றனர் என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறுவது தப்பான கருத்து என்றும் உண்மை நிலவரம் என்னவென்று அறியாமல் ம.இ.காவினரை அவரது வெற்று அறிக்கையால் சீன்டிப் பார்க்க வேண்டாம் என ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் எச்சரித்தார்.

விவேகானந்தா ஆசிரமம் விவகாரத்தில் பிரச்னை எழுந்த நாள் முதல் இருந்து ம.இ.கா உயர்மட்ட தலைவர்கள், உதவித் தலைவர்கள், இளைஞர் பிரிவினர் என அனைத்து தரப்பினரும் அதனை காக்கும் பொருட்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது.

Scroll to Top