நவம்பர் 21, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 35 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டியது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த மேமாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த சில நாட்களாக அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர தொடங்கியது.
இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனை பொதுப்பணிதுறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதனால் தேனி , மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசும் வெடித்தும் இனிப்பு வழங்கியும் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.