நவம்பர் 20, மலேசிய அரச கடற்படை துறைக்குச் சொந்தமான ஹைட்ரோக்ராஃபிக் கப்பல் புதன்கிழமை ‘போஸ்தர்ட் நேவல் ஷிப்யார்ட்’ நிறுவனம் நடத்திய சீரமைப்பு பணியின் போது தண்ணீர் உள்ளே புகுந்து கப்பல் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மூழ்கும் நிலையில் உள்ள கெடி பெரந்தாவ் என்றழைக்கப்படும் இக்கப்பலை மீட்கும் பணியில் ‘போஸ்தர்ட் நேவல் ஷிப்யார்ட்’ நிறுவனம் உட்பட மலேசிய அரச கடற்படையினரும் இறங்கியுள்ளனர்.
இக்கப்பல் மூழ்கிய சம்பவத்தால் இதுவரை எவ்வித உயிர்சேதங்களும் பதிவாகவில்லை. 1998-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கப்பல் தற்போது சீரமைப்பு பணியில் இருந்து வருகிறது. கப்பல் மூழ்கியதற்கான காரணத்தைக் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது