மலேசிய மக்கள் அதிகம் விருப்பும் சமூக வலைத்தளம்: WeChat

மலேசிய மக்கள் அதிகம் விருப்பும் சமூக வலைத்தளம்: WeChat

wecht-logo

நவம்பர் 19, தற்போது மலேசிய இளைஞர்கள் ‘WeChat’ எனும் சமூக வலைத்தளத்தை அதிகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 1,187 விழுக்காட்டினர் ‘WeChat’ –டை அதிகம் பயன்படுத்துவதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.
மலேசியாவில் ‘WhatsApp’ மற்றும் ‘Facebook Messenger’ போன்ற சமூக வலைத்தளங்கள் முறையே 202 விழுக்காட்டினரும் 192 விழுக்காட்டினரும் பயன்படுத்துவதாக ஆய்வின் முடிவுகள் காட்டியுள்ளன.
‘குலோபல் வேப் இண்டெக்ஸ்’ எனும் வணிக நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில் ‘WeChat’ –டை பயன்படுத்தும் 80 விழுக்காட்டினர் 16-லிருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என அறிய முடிகிறது.
‘WeChat’ மலேசிய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக பரவி வருவதற்கு முக்கிய காரணம் அதன் எளிய பயன்பாட்டு முறையே ஆகும் என ‘குலோபல் வேப் இண்டெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேசன் மேண்டர் தெரிவித்துள்ளார்.
மற்ற சமூக வளைத்தளங்களை ஒப்பிட்டு பார்க்கையில் ‘WeChat’ குறுந்தகவல்களை அனுப்பவும் ஒருவருடன் தொடர்பு கொள்ளவும் மிகவும் சுலபமாக இருப்பதாக ஜேசன் மேலும் கூறினார். விரைவில் மலேசிய மக்களிடையே ‘WeChat’-இன் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.