மலேசியாவின் பொருளாதாரத்தை கண்டு: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியப்பு

மலேசியாவின் பொருளாதாரத்தை கண்டு: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியப்பு

ma

நவம்பர் 15, இந்திய அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீடு குறித்து எடுக்கும் முயற்சிக்கு மலேசிய அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீட்டின் நுட்பங்கள் ஒரு முன்மாதிரியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக ‘தி எகோனோமிக் டைம்ஸ்’, என்ற இந்திய வணிக நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளது.
தொடர்ந்து, மலேசிய அரசாங்கத்தின் செயல்திறன் மதிப்பீட்டின் நுட்பங்களைக் குறித்து தாம் வியந்திருப்பதாகவும் மலேசிய அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து பொருளாதார திட்டங்கள் குறிப்பாக வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, மலேசிய அரசாங்க உருமாற்ற திட்டம் மற்றும் பொருளாதார உருமாற்ற திட்டத்தில் பணிபுரியும் நிபுணர்களோடு சந்திப்பு ஒன்றை நடத்த விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.