நவம்பர் 14, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 11-ந் தேதி தனி விமானம் மூலம் தலைநகர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டு சென்ற அவர், கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி. 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.
மாநாடு நடைபெறும் பிரிஸ்பேன் நகருக்கு தற்போது பிரதமர் மோடி சென்று சேர்ந்துவிட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜி.20 மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களும், வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.
இதில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றிய பின் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டை கான்பெர்ராவில் சந்தித்து பேசுகிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள 161-ஆண்டு பழமையான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடிக்கு அப்பாட் விருந்தளிக்கிறார்.