தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் கீழ் இயங்கும் இளம் நிபுணர்கள் குழு ஏற்பாட்டில் இளையோர்களும் அவர்களது திறமைகலும் என்கிற தலைப்புல் ஒரு கலந்துரையாடல் இளையோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலுன் நோக்கமே இன்றைய இந்திய இளைஞர்களை அவர்களது திறமைகளை விரிவுப்படுத்தி பலப்படுத்தி எப்படி வெற்றி காணவைப்பது என்பதே.
இந்த கலந்துரையாடலில் நான்கு தலைசிறந்த பேச்சாளர்களும் கலந்துகொள்கின்றனர். அவர்கள் முறையே TUNE TALK நிறுவனத்தின் தலைமை செயல்திட்ட அதிகாரி திரு.ஜேசன் லொ, நாட்டின் மிகச் சிறந்த திரைப்பட நடிகர் இயக்குனர் அவ்டிலின் செளக்கி சமுகவாதியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமாகிய குமாரி தனுஜா அனந்தனும் நாட்டின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் இயக்குனர் ரவிந்திரன் தேவகுணம் ஆவார்கள்.
இக்கலந்துரையாடல் 15 நவம்பர் 2014 அன்று மதியம் 2.00-5.00 வரை MENARA SSM, KL SENTRIL-ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பேச்சாளர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வதுடன் கலந்துரையாடலுன் அனைத்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள். புது பாணியில் நல்ல பல கருத்துகள் கிடைக்கப்பெறும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள இலவசமே. ஆகவே அனைவரையும் 014-9454177, 012-3398803 ஆகிய எண்களில் தொடர்புக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு இளையோர்களையும் அவர்களது தேவைகளயும் முன்வைத்து நடத்தப்படும் இந்த இலவச கலந்துரையாடலுக்கு 20-40 வயதுக்குட்பட்ட இளையோர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.