2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜெப் புஷ் போட்டி

2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜெப் புஷ் போட்டி

ame

நவம்பர் 13, அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜெப் புஷ்ஷை நிறுத்துவதற்கு குடியரசு கட்சி வரிந்து கட்டுகிறது.

அமெரிக்காவில் கடந்த 4-ந் தேதி செனட் சபையின் 36 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், 46 மாகாண சட்டசபைகளுக்கும், கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளான செனட் சபையிலும், பிரதிநிதிகள் சபையிலும் குடியரசு கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது. இந்த தேர்தல் வெற்றி ஜனாதிபதி ஒபாமாவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் இந்த தேர்தல்களில் கிடைத்துள்ள வெற்றி, குடியரசு கட்சிக்கு புதிய நம்பிக்கையை, வலுவை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மீது இப்போது குடியரசு கட்சி கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது.

அந்த வகையில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ்ஷின் இளைய மகனும், இன்னொரு முன்னாள் அதிபரான ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ்ஷை களமிறக்க அந்தக் கட்சி வரிந்து கட்டுகிறது.

61 வயதான ஜெப் புஷ், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை புளோரிடா மாகாண கவர்னர் பதவி வகித்தவர் ஆவார்.