திருமணத்தை வெறுக்கும் லட்சுமி

திருமணத்தை வெறுக்கும் லட்சுமி

Lakshmi-Menon

நவம்பர் 12, திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று வாய் வலிக்க சொல்லி வருகிறார் லட்சுமி மேனன். எப்படி முடியும் என்று யாராவது விளக்கம் கேட்டால், ‘நிறையபேர் கல்யாணம் பண்ணாமலே நல்லா வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி என்னாலயும் இருக்க முடியும்’ என்கிறார்.

‘இப்படி நீங்க பேசறது அம்மாவுக்குத் தெரியுமா?’ என்றபோது, ‘நான் எது பேசினாலும் அம்மாவுக்கு சொல்லிடுவேன். அவர் என்னை ரொம்ப நம்பறார். நான் எதையும் யோசிக்காம பேச மாட்டேன். அப்படி ஏதாவது பேசினா, அதுக்குப் பிறகு யோசிக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தையும் தாண்டி, வாழ்க்கையில ஜெயிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்’ என்கிறார்.