பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.
தொடக்கத்தில் ஸ்டோசர் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்த ஷரபோவா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்டோசர், இரண்டாவது செட்டிலும் 4-3 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது தனது திறமையான சர்வீஸ்களால் ஆட்டத்தை தனது பக்கமாக திருப்பினார் ஷரபோவா.
அதிரடியாக விளையாடி 2வது செட்டை 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஷரபோவா, 3வது செட்டையும் 6-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். காலிறுதியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்பைன் முகுருசாவை எதிர்த்து ஷரபோவா விளையாட உள்ளார்.
Previous Post: கமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்
Next Post: 3 முறை கோப்பை: யூசுப்பதான் சாதனை