தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு

தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு

Glass-of-milk-2009

நவம்பர் 10, ஆந்திராவில் இருந்து தமிழத்திற்கு வரும் தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. ஆவின் பால் விலை கடந்த 1ம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி வருகின்றன.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பால் விநியோகிக்கும் 4 நிறுவனங்கள் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் அந்நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. பால் விலை மற்றுமின்றி தயிர் பாக்கெட்டின் விளையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 1கிலோ தயிரின் விலையில் 12ரூபாயும், கப் தயிர் விலையில் 20 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது மக்களை கடும் அதிர்ப்தி அடைய செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் 4 முறை பால் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள், தற்போது பால் விலையை உயர்த்தி உள்ளன. தமிழகத்திற்கு நாள் தோறும் தேவை படும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பாலில், 1 கோடியே 29 லட்சம் பாலை தனியார் நிறுவனங்களே விநியோகிப்பதால் இந்த விலை உயர்வு மக்களிடையே கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.