நவம்பர் 10, உலகத் தமிழர்களின் அடையாளம் மாபெரும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசிய வைகோ இதனை தெரிவித்தார். பினாங்கு சர்வதேச தமிழ் மாநாட்டில் தொடக்க விழா 7.11.2014 அன்று மாலை 4 மணி அளவில் தண்ணீர்மலை பால தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெகு சிறப்பாகத் தொடங்கியது. விழாவுக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஆலய நிர்வாகக் குழுவின் சார்பில், நாதஸ்வர, மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினாங்கு சர்வதேச தமிழ் மாநாடு
