நவம்பர் 10, கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவ்விமானம் காணாமல் போனதாக எம்.ஏ.எஸ் அறிவிக்க விரும்புவது குறித்து Voice370 எனும், MH370 விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், இவ்வாண்டு இறுதிக்குள் MH370 விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எம்.ஏ.எஸ் நிறுவனத்தின் தலைவர் ஹுக் டன்லேவி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் வெளியானது. ஆனால் அக்கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
காணாமல் போன விமானத்தின் தேடல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என இதற்கு முன்னர் JACC அளித்த வாக்குறுதிக்கு எதிராக எம்.ஏ.எஸ்-சின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என Voice370 அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.