மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் (MISCF) தேசிய தடகளப் போட்டிகள் 2014 இன்று 08/11/2014 காலை 8.30 மணியளவில் துவங்கி நடந்தது. இந்த போட்டிகளை காலை 08.30 மணியளவில் புக்கித் ஜலில் மினி விளையாட்டு அரங்கில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் துவக்கி வைத்தார்.
பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டத்தோ T. மோகன் கலந்து கொண்டார். மாலை 3.30 மணி வரை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தில் தலைவர் T.மோகன் அவர்களும் டத்தோ SM முத்து அவர்களும் பரிசுகள் வழங்கினர்.
ஜோகூர் அணி 8 தங்கம் 4 வெள்ளி 4 வெண்கலப் பதக்கத்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 4 தங்கம் 3 வெண்கலப் பதக்கத்துடன் பினாங்கு அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
Photos Credit : Mugunthan Ponniah