மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்திய சமுதாயத்தின் விளையாட்டுத் திருவிழா சுக்கிம் SUKIM 2017 (மலேசிய இந்தியர் விளையாட்டி போட்டி) இன்று 04/07/2017 துவங்கியது. இந்த போட்டிகள் 09/07/2017 வரை நடைபெறும். அதிகாரப்பூர்வமாக ஜூலை 06 துவங்கிவைப்படுகிறது. இது தொடர்பாக MIFA தலைவர் டத்தோ T.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
இந்திய சமுதாயத்தின் விளையாட்டுத் திருவிழா சுக்கிம் 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வருடம் சுக்கிம் 2017 தஞ்சோங்மாலிம் உப்சியில் ஜூலை 4 தொடங்கி ஜூலை 9 வரை நடைபெறுகிறது.
சுக்கிம் 2017 யினை ஜூலை 6ம் தேதி மாலை 5 மணியளவில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிட் பின் ஹமிடி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். இவரோடு பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்ரி பின் அப்துல் காதிர் அவர்களும், ம.இ.காவின் தேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்
சமுதாயப் பெருமக்களே ! திரண்டு வாரீர்! நமது திருவிழாவில் பங்கெடுப்பீர்! நமது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பீர்!
நன்றி