நவம்பர் 7, உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
எதிர் கட்சி எம்பிகள் பலரது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஒவ்வொரு லிட்டர் எண்ணெய்க்கும் அரசாங்கம் 12 சென் உதவித் தொகை வழங்குகிறது என்றார்.
எண்ணெய் விலை மேலும் குறைந்தால் அரசாங்கம், ஒன்று விலையைக் குறைக்கலாம் அல்லது எரிபொருளுக்கு விற்பனை வரி விதிக்கலாம் என்றாரவர்.