நவம்பர் 4, பெங்காலி கவர்ச்சி நடிகை சுவஸ்திகா முகர்ஜி . சமீபத்தில் சிங்கப்பூரில் பெங்காலி மொழி பட விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவஸ்திகா சென்று இருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் ஷாப்பிங் சென்றார். அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் சென்றார். நிறைய வித விதமான நகைகளை எடுத்து பார்த்து விலை கேட்டார். அப்போது காது கம்மல் ஜோடி ஒன்றை நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம்.இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ 15 ஆயிரம்
இது அங்குளள சி.சி. டி.வி.கேமராவில் பதிவானது. பிறகு நகை ஏதும் வாங்காமல் நைசாக வெளியேறினார். நகை கடை பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே சுவஸ்திகா சிறை வைக்கப்பட்டார். கம்மலை நான் எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன. என்று தனக்கு தெரியாது என்று சொல்லி கெஞ்சினார். பின்னர் கடை ஊழியர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது பெங்காலி திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்து உள்லது. தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள். இது குறித்து பலர் சசமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.