பல முஸ்லீம் அமைப்புகள் சன்வே நகரில் கட்டப்படும் 3அடுக்கு தேவாலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்புக்கு அத்தரப்பு கூறும் காரணம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அததரப்பு முழு வழங்கும் காரணம் என்னவென்றால், pjs 8/9 சன்வே நகரில் அதிகம் வசிப்பது முஸ்லிம்கள் என்பதாலும் மாநில சுல்தான், மாநில முதல்வர், மாநில முதன்மை அதிகாரிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலும் சாலையிலிருந்து தேவாலயம் பார்க்கும்படி அமைவது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதாகும்.
அப்படிப் பார்த்தால் மலேசியாவில் அதிகமாக வாழ்வது முஸ்லிம்கள்தான். அதுவும் வருகின்ற 2020 ஆம் ஆண்டு 70 விழுக்காடி, ஜனதொகையில் அனைவரும் முஸ்லிம்களாக இருக்க யாரும் ஆலயம், தேவாலயம், பிற இன வழிப்பாட்டு தளங்கள் கட்டமுடியாது என்று பொருள் கொள்ள முடியுமா?
நாட்டில் பெருமான்மை வகிக்கும் தருவாயில் முஸ்லிம் நண்பர்கள் தங்களது சமயத்தின்பால் நம்பிக்கை கொள்ளும் அதே சமயத்தில் மற்ற சமயமும் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்து வழிவிடவேண்டும்.
சாலையிலிருந்து தேவாலயம் பார்க்க முடிவதை காரணம் காட்டி தேவாலய கட்டுமானத்தை தடுக்க நினைப்பதும் இதற்கு சுல்தான், முதல்வர் போன்றோரை குறிப்பிட்டுக் காட்டுவதும் அறியாமையன்றி வேறு எதுவாக இருக்க முடியும்.
கண்டிப்பாக சன்வே நகரில் கட்டப்படும் தேவாலயம் நாட்டில் வாழும் கிறிஸ்த்துவர்கள் அமைதியாக நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்டு தங்களது சமயத்தை பின்பற்றவே அன்றி இஸ்லாமை அவமதிப்பதற்காக அல்ல. இதையுணர்ந்து, நாம் வாழ்வது பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் என்பதை என்றும் நினைவில் கொண்டு அனைத்து சமயங்களையும் மதித்து வாழ்வது நாட்டிற்கு வளத்தை அளிக்கும்.