ரீமா கல்லிங்கல் வெளிப்படையாக கருத்துக்களை சொல்லி அரசியலில் நுழைய ஆயத்தம் ஆவதாக திரையுலகில் பேசப்படுகிறது. பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயின்களிடம் சிக்கலான கேள்விகள் கேட்கும்போது பதில் சொல்லாமல் நழுவிவிடுவார்கள். ஒரு சிலர் விளைவுகள் என்ன வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதுண்டு. அந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்தான் ரீமா கல்லிங்கல். முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து உருவான டேம் 999 என்ற படத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தபோது படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக பணியில் ஆர்வம் கொண்டிருக்கும் ரீமா எதற்கும் ஒளிவு மறைவின்றி பதில் சொல்வார்.
இது அவர் அரசியல் பிரவேசத்துக்கு எடுக்கும் பயிற்சி என்று சிலர் கூறி வருகின்றனர். இணைய தளங்களிலும் தனக்கென பக்கங்களை உருவாக்கி வைத்திருக்கும் அவர் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார். இதுபற்றி ரீமா கூறும்போது,பிரபலமான செலப்ரட்டிகளில் நான் ஒருத்தியாக இருக்கிறேன். என்னுடைய வார்த்தைகளால் சமுதாயத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்று எனக்கு தெரியும். இளைஞர்களிடமும் என்னுடைய வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியும் என்றார்.