நவம்பர் 4, குறைவான படங்களில் நடித்தாலும் வருத்தமில்லை என கூறி சமாளிக்கிறார் சாந்தினி. டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து பிளஸ் 2′ படம் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடிக்கும் அவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபற்றி சாந்தினி கூறியது:எனக்கு வரும் எல்லா படங்களையும் நான் ஏற்பதில்லை. திரும்பதிரும்ப ஒரே கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட புதிய கதாபாத்திரத்துக்காக காத்திருக்கவே விரும்புகிறேன். எல்லா படத்தையும் ஏற்க வேண்டும் என்று அவசரப்படவும் இல்லை. தமிழில் சுசீந்திரன் தயாரிக்கும் படம் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறேன். ‘நெல பெஞ்ச் காலனி’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். கோபால் இயக்குகிறார். இது நான் நடிக்கும் முழுநீள கமர்ஷியல் படம். கல்லூரி மாணவியாக நடிக்கிறேன்.இவ்வாறு சாந்தினி கூறினார். இன்னொரு ஹீரோயினுக்கு செல்லும் படத்தை தட்டி பறிக்க பல ஹீரோயின்கள் வியூகம் வகுத்து செயல்படும் நேரத்தில் சாந்தினி மட்டும் ‘படங்கள் வராததால் வருத்தமில்லை என்பது அவரது சோகத்தை வெளிக்காட்டாமல் மறைக்கும் செயல் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர்.