இன்றும் தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

இன்றும் தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

anwar

நவம்பர் 3, இரண்டாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு வழக்கின் அரசு தரப்பு சார்பில் செவிமெடுப்பு இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவிற்கு டான் ஶ்ரீ ஷாஃபி அப்துல்லா தலைமையேற்கிறார்.

இன்று காலை 8.45 மணிக்கு புத்ராஜெயா நீதிமன்றத்தின் விசாரணை அறை 1க்கு ஷாஃபி அப்துல்லாவும், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஹானாஃபியா சக்காரியா ஆகியோரும் வருகைப்புரிந்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது மனைவி டத்தின் ஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் தங்கள் வழக்கறிஞர்களுடன் காலை 9 மணிக்கு வருகைப் புரிந்தனர்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இவ்வழக்கில், கடந்த மார்ச் 7-ஆம் தேதி டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து கடந்த ஏப்ரில் 24-ஆம் தேதி, அன்வார் இப்ராஹிம்க்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு செய்தார்.

அன்வார் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றஞ்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க செக்‌ஷன் 377B சட்டம் வகை செய்கிறது.