அக்டோபர், 24 பூனம் பஜ்வாக்கு நடிக்க வாய்ப்பு பெற்றுத்தந்தார் இனியா. கோலிவுட்டில் இளம் ஹீரோக்கள் நட்பு நைட் கிளப்பில் பார்ட்டி கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதுபோல் ஹீரோயின்களும் தங்களுக்குள் நடத்திவந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் மற்றொரு ஹீரோ நடிப்பது கடினம் என்ற நிலை மாறி தான் நடிக்க முடியாத படங்களில் சக ஹீரோக்களுக்கு சிபாரிசு செய்கின்றனர். ஹீரோயின்களும் கூடுதல் ஹீரோயின் கதைக்கு தேவைப்பட்டால் நட்பு ஹீரோயினுக்கு சிபாரிசு செய்கின்றனர். சமீபத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க விசாகா சிங்கிற்கு சான்ஸ் பெற்றுத்தந்தார் அப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பிரியா ஆனந்த். சினிமா விருது நிகழ்ச்சிகளில் மேடையில் நடனம் ஆடி நட்பில் இணைந்தவர்கள் இனியா, பூனம் பஜ்வா. இதுவரை படங்களில் இணைந்து நடித்ததில்லை. தற்போது ‘ரோஜாபூக்களாம்‘ மலையாள படத்தில் இனியாவும், பூஜாவும் இணைந்திருக்கின்றனர். இதுவும் ஒருவருக்கு ஒருவர் செய்துகொண்ட சிபாரிசால் அமைந்த ஜோடிதான். இதுபற்றி இனியா கூறும்போது,‘பூஜாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. இருவரும் நடன நிகழ்ச்சிகளில்தான் தோழிகள் ஆனோம். அந்த நட்புதான் எங்களை இப்போது படத்தில் இணைத்திருக்கிறது‘ என்றார்.