அக்டோபர், 20 அரசாங்கம் கொண்டுள்ள கடன்தொல்லைகளை ஈடு கட்டும் நோக்கில் பொருள் மற்றும் சேவை வரி(GST) அமல்படுத்தப்படுவது சரியல்லை என முன்னாள் அமைச்சர் தெங்கு ரஸாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எதிர் நோக்கும் கடனை சரிசெய்ய GSTயின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பணம் சேகரிக்கப்படுவது தவறு எனவும், வரி செலுத்துவது என்பது ஒருவரின் வசதி மற்றும் பண ஆற்றலை பொறுத்தே அமைந்துள்ளதெனவும் அவர் நினைவுபடுத்தினார்.
வாழ்க்கை செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள இத்தருணத்தில் GSTயை அறிமுகப்படுத்துவது முறைதானா என அவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்தாண்டின் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கும் 6 விழுக்காடு வரையிலான GST வரி வசூல், அகற்றப்படுவது மற்றும் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்களை கொண்டிருக்காத வேளையில், அது தொடர்ந்து ஏற்றம் காணும் எனும் அச்சம் மக்களிடையை எழும் என அவர் எச்சரித்தார்.