என் தமிழ்

போருக்கு பாகிஸ்தான் தயார்: முன்னாள் அதிபர் முஷரப்

Pervez Musharraf 1

அக்டோபர், 17 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் உள்ள மக்கள், இந்தியாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களை நாம் தூண்டிவிட வேண்டும். இந்தியாவுடன் போரிட பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. லட்சக்கணக்கான பாகிஸ்தான் மக்கள், படையெடுத்துச் சென்று காஷ்மீருக்காக போரிட தயாராக உள்ளனர். எனவே, பாகிஸ்தான் திருப்பி அடிக்காது என்ற மாயையில் இந்தியா இருக்கக்கூடாது. ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட மாட்டோம். பதிலுக்கு பதில் எங்களால் கொடுக்க முடியும்.

நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிரானவர். அவர் மாறவில்லை. நம்மிடம்தான் தவறு உள்ளது. அவரது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க நாம் ஓடுகிறோம். நாம் நமது கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Scroll to Top