விமானம் கடலில் விழுவதற்கு முன் 2 விமானிகள் தூக்கம்

விமானம் கடலில் விழுவதற்கு முன் 2 விமானிகள் தூக்கம்

airbus_2205306b

அக்டோபர், 14, 2009ம் ஆண்டு ஏர்-பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதில் 228 பேர் பலியாகினர். விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கு முன்னதாக மூன்று விமானிகளில் இரண்டு பேர் தூங்கியுள்ளனர். ஒருவர் நாம் இறக்க போகிறோம் என்று கூச்சலிட்டுள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி சென்ற ஏர் பிரான்சு ஏஎப் 447 என்ற விமானம் கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் மிக நவீனமானது. இந்நிலையில் விமானம் 447-ன் கடைசி தருணங்கள் பற்றி கொடூரமான விவரங்கள் வெளியாகியுள்ளது. விமானம் விபத்து குறித்த விசாரணையில் இந்த புதியதகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணை தகவல் அடங்கிய, வேனிட்டி ஃபேர் பத்திரிக்கையின் அக்டோபர் மாத பதிப்பு, பயணிகள் ஜெட் விமான பாதுகாப்பு குறித்து திகிலூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

விமானம் புயலின்பிடியில் சிக்கியபோது, விமானத்தை ஓட்டிய, விமானிகள் டேவிட் ராபர்ட் (வயது 37), செட்ரிக் போனின் (வயது 32), மார்க் டுபாய்ஸ் (வயது 58) ஆகிய மூன்று பேரில் இரண்டு பேர்கள் தூங்கியுள்ளனர் என்று அவர்களது உரையாடல் பதிவாகியுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில், விமானம் வானில் சென்றபோது மோசமான வானிலை ஏற்பட்ட போது விமானத்தின் மூத்த விமானி, போனின்னை விமானத்தை இயக்க கூறிவிட்டு தூங்க சென்றுள்ளார். அவருடைய களைப்புதான் அவரை தூங்க செல்ல செய்தது என்று நான் நம்பவில்லை. ஏர் பிரான்ஸில் உள்ள கலாச்சாரத்தின் ஒருபகுதியாக, இது ஒரு வழக்கமாக நடத்தை போன்றே இருந்தது. மூத்த விமானி விட்டுசென்றது விதிமுறைக்கு எதிரானது இல்லை. இன்னும் இது ஆச்சரியமாக உள்ளது, விளைவு இருந்தால் நீங்கள்தான் பொறுப்பு, முக்கிய நிகழ்வின்போது நீங்கள் விடுமுறைக்கு போக கூடாது என்று அவர் கூறியுள்ளார். தூங்க செல்வதற்கு முன்னதாக அவர் நேற்று இரவு நான் போதுமான அளவு தூங்கவில்லை. ஒரு மணி நேரம் போதுமானதாக இல்லை என்று கூறினார் என கூறப்படுகிறது. இது டுபாய்ஸ் தன் காதலியுடன் ரியோவில் இரவு தூங்கியுள்ளார் என்று காட்டுகிறது. என்று தெரிவித்துள்ளார்.