ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது

JAYALALITHA-ARTICLE1

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று 16-வது நாளாக ஜெயலலிதா சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தக்கல் செய்யபட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. இதையடுத்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 9-ந்தேதி மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெய் கிஷோர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எச்.வி.தத், சிக்ரி, லோகு ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.