சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அடுத்த வாரம் அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு 18–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடப்பதற்கு 4 நாட்களே அவகாசம் உள்ளதால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
ஒரு வேளை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது தாமதமானால் அவரை பெங்களூர் ஜெயிலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஜெயிலுக்கு மாற்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவை சிறை மாற்றும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கர்நாடகா முதல்–மந்திரி கூறி விட்டார்.