நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டில் மொத்தம் 74,335 டெங்கி காய்ச்சல் சம்பவங்களும், 143 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012-ஆம் ஆண்டு 21,900 சம்பவங்களும் 35 மரணச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 43,346-ஆகப் பதிவாகியது. மொத்தம் 92 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.