அக்டோபர்3- MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் ஐந்து மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை தாயகம் கொண்டு வரப்பட்டன. நெதர்லாந்திலிருந்து MH19 விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 5 மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.38 மணிக்கு கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தை வந்தடைந்தன.
அதனையடுத்து காலை 8.58 மணிக்கு, கே.எல்.ஐ.ஏ பூங்கா ராயா மையத்தில் 1 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆறாவது கட்டமாக தாயகம் கொண்டுவரப்பட்ட மலேசியர்களின் சடலங்களுக்கு இராணு மரியாதை செலுத்தப்பட்டது. சடலங்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன், போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய், மகளிர், குடும்பம், மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ரொஹானி காரிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.