தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் வேல்முருகன் (42). அலுவலக வேலை தொடர்பாக சென்னை வந்தார். இன்று காலை போலீஸ் உடையுடன் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வேல்முருகன் சென்றார்.
காலை 11.30 மணியளவில் டி.ஜி.பி. பிரதான வாயில் முன்பு நின்று அவர், கையில் கொண்டுசென்ற மண்எண்ணெய் பாட்டிலை திறந்து உடலில் ஊற்றினார்.
‘புரட்சிதலைவி அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டபடி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
இதையடுத்து, டி.ஜி.அலுவலக போலீசார் விரைந்து வந்து வேல்முருகனை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மைலாப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விளையாட்டுத்துறையில் ஆர்வமிக்க வேல்முருகன், போலீஸ் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பரிசுகளும் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஜெயலலிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். எனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.