பாகிஸ்தான் தூதர் இந்தியாவில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது முற்றிலும் சரியான செயல் அல்ல என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தானின் தூதர்கள் ஹூரியத் தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இது ஒன்றும் புதிய செயல் அல்ல. ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து இன்னும் மோடி அரசிடம் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது சரியான செயல் அல்ல .அதற்கு இது சரியான தருணமும் அல்ல. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளது என்று ஐ.நா.வில் நரேந்திர மோடி பேசியதை வரவேற்கிறேன். இவ்வாறு அஜீஸ் கூறியுள்ளார்.
Previous Post: பெரு நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.