மலிவு விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமெண்ட் விலை ஏற்றத்தினால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அம்மா சிமெண்ட் திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன்படி தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் சிமெண்ட், மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post: இந்திய வீராங்கனை நேவால் தோல்வி