என் தமிழ்

வணிக வருமான வரி தாக்கல் குறித்த இலவச கருத்தரங்கு : டிசம்பர் 5ஆம் தேதி காப்பாரில் நடைபெறுகிறது

சிலாங்கூர், 25 நவம்பர் 2026 : வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிறுவன இயக்குநர்கள் வணிக வருமான வரியை முறையாகத் தாக்கல் செய்வது குறித்துத் தெரிந்துகொள்ளும் வகையில், எஸ்.எம்.வி. குளோபல் அகாடமி நிறுவனம் இலவசக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

“உங்கள் வணிக வருமான வரியை எவ்வாறு தாக்கல் செய்வது” என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கு, வரும் டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிலாங்கூர், காப்பாரில் உள்ள SMV Wedding Package மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பட்டயக் கணக்காளர் திரு ராஜ் இக்கருத்தரங்கை வழிநடத்துவார். இதில் வணிக வருமான வரி தொடர்பான அடிப்படை விளக்கங்கள், வரி தாக்கல் செய்யும் நடைமுறைகள், வரிக் கழிவுக்குத் தகுதியான வணிகச் செலவுகள், முறையான கணக்குப் பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பராமரித்தல் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்படும்.

மேலும், வரி தாக்கலில் பொதுவாக ஏற்படும் தவறுகள், உள்நாட்டு வருவாய் வாரியத்தின் (LHDN) வரி விதிமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் சிறந்த வரித் திட்டமிடலுக்கான வழிமுறைகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ளலாம்.

இக்கருத்தரங்கில் பங்கேற்கக் கட்டணம் ஏதுமில்லை. ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்வதற்கு https://chat.whatsapp.com/ICbhVP4Jd8U2DJQp9um704?s=cl&p=a&iam=2 என்ற வாட்ஸ்அப் குழு இணைப்பைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 012-377 3561 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Scroll to Top