என் தமிழ்

Xiaomi 18 ப்ரோ முன்பதிவு : செல்காம்டிஜி வாடிக்கையாளர்களுக்கு RM4,045 மதிப்பிலான சலுகைகள்

பெட்டாலிங் ஜெயா, 19 நவம்பர் 2026 : சியோமியின் புதிய Xiaomi 18 Pro 5G மற்றும் Xiaomi 18 Pro Max 5G திறன்பேசிகளை மலேசியாவில் முதன்முதலாகப் பெறுவதற்கான முன்பதிவை செல்காம்டிஜி நிறுவனம் தொடங்கியுள்ளது. இம்முன்பதிவின் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்தம் RM4,045 வரை மதிப்புள்ள பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம்.

நவம்பர் 26ஆம் தேதி வரை செல்காம்டிஜியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள அதன் விற்பனை நிலையங்களில் Easy360 தவணைத் திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். மாதம் RM92 முதல் 36 மாதங்கள் வரை வட்டியில்லா தவணையில், முன்பணம் செலுத்தாமல் திறன்பேசியைப் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்தத் திறன்பேசிகள் நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்.

Postpaid 5G 100 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் Easy360 மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு RM499 மதிப்புள்ள Xiaomi Smart Air Purifier 4 Compact இலவசமாக வழங்கப்படும். Xiaomi 18 Pro Max வாங்குபவர்களுக்கு RM659 மதிப்புள்ள Xiaomi Watch S5 46mm கூடுதல் பரிசாகக் கிடைக்கும். மேலும், திறன்பேசியின் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையிலிருந்து RM2,287 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இதனுடன், செல்காம்டிஜியின் Play Deals சலுகையின் கீழ் Postpaid 5G 120 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு ஒரு மாதக் கட்டணச் சலுகை, பழைய திறன்பேசியை மாற்றும்போது கூடுதலாக RM300 தள்ளுபடி மற்றும் PhoneCARE சேவைக்கு 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு https://cdlink.net/xiaomi18 என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Scroll to Top