என் தமிழ்

அமெரிக்காவில் தீபாவளியை கூட்டாட்சி அரசு விடுமுறையாக அறிவிக்க மசோதா தாக்கல்

வாஷிங்டன், 11 நவம்பர் 2026 : அமெரிக்காவில் தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ கூட்டாட்சி அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சுஹாஸ் சுப்ரமணியம், ஸ்ரீ தனேதர், ரோ கன்னா, அமி பெரா உள்ளிட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையும், அறியாமையின் மீது அறிவும் வெற்றி பெறுவதைக் குறிக்கும் முக்கியமான பண்டிகை என்று கிரேஸ் மெங் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்துக்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், தீபாவளியை கூட்டாட்சி அரசு விடுமுறையாக அங்கீகரிப்பது, இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் அமெரிக்கச் சமூகத்தின் மதிப்புமிக்க அங்கத்தினர்கள் என்பதை வெளிப்படுத்தும் என்றார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவின் 12-ஆவது அதிகாரப்பூர்வ தேசிய விடுமுறையாக தீபாவளி அங்கீகரிக்கப்படும்.

இதற்கு முன்பும் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் கிரேஸ் மெங் இதே மசோதாவைப் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்திருந்தார். அப்போது அது மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டபோதிலும், அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

Scroll to Top