ஜோகூர், 11 நவம்பர் 2026 : பண்டிகைக் கால உற்சாகம் இன்னும் ஓயாத நிலையில், இம்முறை தேர்தல் களத்தில் நண்பர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மெலாக்காவுக்குச் சென்றதாக குமரன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மெலாக்கா தேர்தலில் போட்டியிடும் நண்பர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், அவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளில் உதவுவதற்கும் இன்று மெலாக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கட்டான சூழல்களிலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் நட்பும் தோழமையும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வலிமையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். மெலாக்கா தேர்தலில் போட்டியிடும் அனைவரின் பணிகளும் சிறப்பாக அமைய வாழ்த்தியதுடன், தேசிய முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். “போராட்டம் தொடரட்டும், மக்கள் சேவையும் தொடரட்டும்!” என குமரன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.








