என் தமிழ்

லெம்பா பந்தாய் : தீபாவளியை முன்னிட்டு 1,600 பேருக்கு தலா 150 ரிங்கிட் பற்றுச்சீட்டு வழங்கிய ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர், 29 அக்டோபர் 2026 : லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,600 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு தலா 150 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டு(வவுச்சர்) வழங்கப்படவுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில், நேற்று இரவு தாமான் ஸ்ரீ செந்தோசாவுக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் தீபாவளி உதவியை வழங்கினார்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்கும் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்துவதுடன், பண்டிகைக் காலத்தில் குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் நோக்கத்தையும் இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.

Scroll to Top