புத்ராஜெயா, 29 அக்டோபர் 2026 : மலேசிய தினக் கொண்டாட்டம் 2026 நிறைவு விழாவில், கிட்டத்தட்ட 1,000 பணியாளர்கள் மற்றும் 22 குழுக்களின் பங்களிப்பைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் இக்கொண்டாட்டங்களின் முதன்மைக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில், நேற்று இரவு புத்ராஜெயாவில் உள்ள தி எவர்லி விடுதியில் நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களை நேரில் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். நேரடி ஒளிபரப்புகளும் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றன. மேலும், 147 மூலோபாயப் பங்காளிகள் இணைந்து 5.15 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஆதரவை வழங்கினர்.
தேசிய தகவல் துறை, தேசிய மாதத் தொடக்க விழா மற்றும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி குழு, நிகழ்ச்சி நூல் தயாரிப்புக் குழு, ஊடகம் மற்றும் விளம்பரக் குழு என மூன்று குழுக்களில் பங்கேற்றதற்காகப் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது. கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதில் துறையின் பணியாளர்கள் ஆற்றிய பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பணிகள் இந்த அங்கீகாரத்தின் மூலம் பாராட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், தகவல் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங், தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா, தேசிய தகவல் துறையின் தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பல்வேறு துறைகளின் தலைவர்கள், அமைச்சு மற்றும் தேசிய தகவல் துறையின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.







