கோலாலம்பூர், 29 அக்டோபர் 2026 : தேசிய இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி 2026-இல் மூன்று தமிழ்ப்பள்ளிகள் வெள்ளி விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளன. ஜோகூர் மாநிலம், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி நான்காவது இடத்தையும், பேராக் மாநிலம், புனித தெரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி ஐந்தாவது இடத்தையும், பேராக் மாநிலம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தச் சாதனையைப் படைத்த மூன்று பள்ளிகளின் மாணவர் விஞ்ஞானிகள், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளிச் சமூகத்தினருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன. இளம் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து, அறிவியல் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.







